சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூர்: டம்பைன்ஸில் உள்ள ஒரு HDB குடியிருப்புக் கட்டிடத்தில் பிளாக் 366 இன் 10-வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று (மே 20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) காலை 5:35 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்து பாதுகாப்புப் படையினர் சம்ம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வருவதற்கு முன்பே அந்த குடியிருப்பில் வசித்த 2 பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பாதுகாப்புக் கருதி கட்டிடத்தில் வசித்த 30 குடியிருப்பாளர்களை SCDF வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் அடர்த்தியான புகையை சுவாசித்த குடியிருப்பாளர் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தீயணைப்புப் பணியின் போது தனது வலது காலில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தீயணைப்பு வீரர் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தானது HDB குடியிருப்பின் வரவேற்பறை மற்றும் சமையல் அறையில் ஏற்பட்டுள்ளது. SCDF வீரர்கள் இரண்டு தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

Lம்பைன்ஸ் GRC நாடாளுமன்ற உறுப்பினர் டான் யீ குவான் இந்த விபத்து குறித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் பல்வேறு முகமைகளின் நிறைவான உதவிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விபத்தில் கடுமையான காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதற்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK