சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை பணி நிறைவு..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில்பாதை
உள் கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் முழுமையாக நிறைவடைய இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (மே 29) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுவரை அந்தப் பாதையில் பயணம் செய்த வண்டிகளில் அவை இறுதி சென்றடையும் நிலையங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

எடுத்துக்காட்டாக டோபி காட் அல்லது ஹார்பர் ஃபிரண்ட் என்ற நிலையங்களின் பெயர்கள் இருவழிப் பாதைகளில் எதிரெதிரே செல்லும் வண்டிகள் காட்டப்பட்டன.

எனவே வட்டப்பாதையின் கட்டமைப்பு நிறைவடைந்ததும் வலதுசுழற்சி முறையிலும், இடது சுழற்சி முறைகளும் ரயில் செல்லும் பாதையின் விவரங்கள் வெளியிடப்படப்படும்.

அதாவது கடிகார திசை(Clockwise), எதிர் கடிகார திசை(Anti-Clockwise) என்ற வகையில் ரயில் செல்லும் திசை பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த வழிகாட்டி முறை குறித்து பொது கருத்துக்கணிப்பு நடத்திய போது பொதுமக்கள் அதிகமாக இதையே தேர்வு செய்ததாகவும் LTA தெரிவித்துள்ளது.

வட்டப்பாதை ஜூலையில் திறப்பதற்கு முன்பாக ஒரு புதிய வழிகாட்டி முறைகளைப் பயணிகள் தெரிந்து கொண்டு பழக்கப்படுத்திக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

புரோமினாட், எஸ்பிளனேட், போனா விஸ்டா, பாயா லேபார் நிலையங்களில் மே 29 -ஆம் தேதி முதல்ம சீரமைக்கப்பட்ட வழிகாட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

கெப்பல், கெண்டோன்மென்ட், பிரின்ஸ் எட்வர்ட் ரோடு ஆகிய 3 ரயில் நிலையங்களும் பொதுமக்கள் பார்வைக்கு ஜூலை 4-ம் தேதி திறந்து விடப்படும். அதற்குப் பிறகு அங்கு பயணிகள் சேவை ஜூலை 12ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஹார்பர் ஃபிரண்ட் – மெரினா பே நிலையங்களுக்கு இணைப்பு நிறைவு பெற்று வட்டப்பாதை முழுமை அடையும் என்பதையும் LTA குறிப்பிட்டுள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK