தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்தது:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் குழந்தைகளுக்கு சீருடை தைப்பது, பள்ளி பைகள், நோட்டுப் புத்தகங்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளில் பெற்றோர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கோடை விடுமுறையை சொந்த ஊர்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் மகிழ்ச்சியாக கழிப்பதற்காக வெளியூர் சென்றிருந்த சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.

சென்னைக்கு வருவதற்கான பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் இல்லை. அதே போல் தனியார் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டாலும் அவற்றிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சாலை மார்க்கமாக வாகனங்களில் வருபவர்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதனால் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்த பெரும்பாலான பயணிகள், கூடுதல் கட்டணம் செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் விமானங்கள் மூலம் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக மதுரை, தூத்துக்குடி திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

3 மடங்கு உயர்வு:
பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத்தீர்ந்துள்ளன. சில விமானங்களில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றின் கட்டணங்கள் 3 மடங்கு உயர்ந்துள்ளன. அதன்படி மதுரை-சென்னை இடையே சாதாரண நாட்களில் ரூ.5,800 ஆக இருந்த கட்டணம் நேற்றும், இன்றும் ரூ.17,303 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் தூத்துக்குடி- சென்னை இடையே ரூ.6,623 ஆக இருந்த கட்டணம் ரூ. 17,272 ஆக அதிக ரித்து உள்ளது.

மேலும் திருச்சி-சென்னைக்கு ரூ.4.529 ஆக இருந்த கட்டணம் ரூ.14.404 ஆகவும், கோவை- சென்னைக்கு ரூ.4,744 ஆக இருந்தது ரூ.16,504 ஆகவும், சேலம்-சென்னைக்கு ரூ.3,734 ஆக வசூ லான கட்டணம் ரூ.5,170 ஆகவும் உயர்ந்து இருந்தது.

திருவனந்தபுரம்-சென்னைக்கு ரூ.5,773 இருந்த கட்டணம் ரூ.13.516 ஆகவும், கொச்சி-சென்னைக்கு ரூ.4,980 ஆக இருந்த கட்டணம் ரூ.11,055 ஆகவும் வசூலிக்கப்பட்டது.

பயணிகள் கோரிக்கை:
சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் கட்டணங்கள் வழக்கமான அளவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான கட்டணங்கள் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதால், வெளியூர்களுக்கு சென்று இருந்த பயணிகள் விமானங்களில் வருவதில் சென்னைக்கு சிரமங்களை திரும்பி சந்தித்து வருகின்றனர். எனவே, நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல்விமான சேவைகளை இயக்க வேண்டும் என்றும் சிறிய ரகவிமானங்களுக்கு பதிலாக ஏர்பஸ், போயிங்போன்ற பெரிய ரக விமானங்களை இயக்கவேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது.

பஸ்களிலும் கட்டணம் உயர்வு:
தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள்
4-ந்தேதி திறக்க உள்ள நிலையில், கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நெல்லை, நாகர்கோவிலில் இருந்து…
அதில், பெரும்பாலான பஸ்கள் வழக்கமாக வார விடுமுறை நாட் களில் வசூலிக்கும் அளவிலேயே கட்டணத்தை வசூலிக்கின்றன. குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்று பல மடங்கு கட்டண உயர்வு இல்லை. அதே நேரத்தில் ஒருசில சிறப்பு வசதிகள் கொண்ட ஆம்னி ஏ.சி. பஸ்களில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. அதாவது ம, நெல்லை, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும்.

அந்த வகையில் ரூ.1000 முதல் ரூ.1200 வசூலிக்கப்படும் இதுவே வார விடுமுறை நாட்களில் சற்று அதிகமாக வசூலிக்கப்படும். அந்த வகையில் கோடை விடுமுறை முடிவடைவதையொட்டி சென்னை திரும்புவதற்கு நெல்லை, நாகர்கோவிலில் இருந்து ஆம்னி பஸ் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை வசூலிக்கப்படுகிறது. ஒருசில உயர்ரக ஆம்னி பஸ்களில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 200 வரை வசூலிக்கப்படுகிறது.

கோவை, மதுரையில் இருந்து… இதேபோன்று கோவையிலிருந்து சென்னை வருவதற்கு ரூ.3 ஆயிரத்து 200 வரை வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. உயர்ரக ஆம்னி பஸ்சில் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK