எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!! ஆதாய வரி குறைப்பு அமல்..!!

எரிபொருள் ஏற்றுமதியில் முக்கிய மாற்றம்..!!

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான திடீர் ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

கொள்ளை லாபம்:
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியவுடன் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.

ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது.

இதை சாதகமாக பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்து, கொள்ளை லாபம் ஈட்டும் வேலையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன.

திடீர் ஆதாய வரி:
அவர்களின் ஏற்றுமதி முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவும், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கச் செய்யவும் ‘திடீர் ஆதாய வரி’ என்ற வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

கடந்த மார்ச் 26-ந் தேதி இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை வரி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக, கடந்த மே 16-ந் தேதி, பெட்ரோல் ஏற்றுமதி மீதான ஆதாய வரி லிட்டருக்கு ரூ.3 ஆகவும், டீசல் ஏற்றுமதி மீதான ஆதாய வரி லிட்டருக்கு ரூ.16.50 ஆகவும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான ஆதாய வரி ரூ.16 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பாதியாக வரி குறைப்பு:
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வரிவிதிப்பை மத்திய அரசு மாற்றி அமைத்தது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான ஆதாய வரி, லிட்டருக்கு ரூ.1.50 ஆக, அதாவது பாதியாக குறைக்கப்பட்டது.

டீசல் ஏற்றுமதி மீதான வரி ரூ.13.50 ஆகவும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரி ரூ.9.50 ஆகவும் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம், நேற்று (திங்கட்கிழமை- ஜூன் 1) அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சாலை மற்றும் உள்கட்டமைப்பு கூடுதல் வரி பூஜ்யமாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான தற்போதைய வரிகளில் மாற்றம் இல்லை என்றும் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK