2. நோய்க்காரணிகள்: எபோலா வைரஸின் பல இனங்கள் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஜைர் எபோலா வைரஸ், சூடான் எபோலா வைரஸ், பண்டியபுக்யோ எபோலா வைரஸ் முக்கியமானவை.
பழ வெளவால்கள் இந்த வைரஸ்கள் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
3. எபோலா பரவும் விதம்! 👉உடலில் வெளிப்படும் திரவங்கள் மூலம் எபோலா வைரஸ் பரவும். அத்தகைய உடல் திரவங்கள்: இரத்தம் | உமிழ்நீர் | வியர்வை | வாந்தி | சிறுநீர் | விந்து
👉பரவும் சூழல்: பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு (வவ்வால், குரங்கு, சிம்பான்சி).
👉 பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நோயாளிகளை பராமரித்தல்.
4. எபோலா நோய் அறிகுறிகள்: * திடீர் காய்ச்சல் * கடுமையான தலைவலி * தசை வலி மற்றும் மூட்டு வலி * சோர்வு மற்றும் பலவீனம் * தொண்டை வலி | வாந்தி * வயிற்றுப்போக்கு * வயிற்று வலி * தோல் சிரங்கு * உட்புற மற்றும் வெளிப்புற இரத்தக்கசிவு * சம்பந்தப்பட்ட உடல் உறுப்பு செயலிழப்பு *ஆரம்ப நிலையில் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை போலவே எபோலா வைரஸால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் வீரியம் அமைந்திருக்கும்.