சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கந்துவட்டிக்காரரின் அட்டகாசம்..!! உதவியாளராக செயல்பட்ட இளைஞர் கைது..!!

சிங்கப்பூர் காவல்துறைக்கு கந்து வட்டிக்காரர்களின் தொந்தரவுகள் குறித்து பல புகார்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடன் வாங்கியவர்களின் முன் கனவுகள் மிதிவண்டி பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது மேலும் கதவுகளுக்கு வெளியே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளும் அங்கே இடம் பெற்றிருந்தது. இந்த குறிப்புகளில் இருந்த வார்த்தைகள்: “உன் கடனை திருப்பிச் செலுத்து. இது ஒரு எச்சரிக்கை மட்டுமே; அடுத்த முறை உன் வீட்டை எரித்து விடுவேன்”

கந்துவட்டிக்காரருக்கு உதவியாளராக செயல்பட்டதாகவும் குடியிருப்பு வீடுகளின் கதவுகளை பூட்டுவது மற்றும் தீ வைப்பதாக மிரட்டி குறிப்புகளை எழுதி சென்ற குற்றத்திற்காகவும் மேலும் கடனாளிகளை துன்புறுத்தியதற்காகவும் 25 வயது இளைஞரை அடையாளம் கண்டு ஜூன் 9 ஆம் தேதி அவரை கைது செய்து மேலும் ஆதாரமாக ஒரு கருப்பு நிற மிதிவண்டி பூட்டு அத்துடன் ஒரு கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.

பணக்கடன் வழங்குவோர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்த இளைஞரை இன்று (ஜூன் 11) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.

இதுபோன்று குற்றங்களை முதல் முறை செய்பவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை, $5,000 முதல் $50,000 வரை அபராதம் மற்றும் ஆறு பிரம்படிகள் வரை வழங்கப்படும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK