KPE சுரங்கப்பாதையில் பரபரப்பு..!! ஒரே நேரத்தில் மோதிக்கொண்ட 6 வாகனங்கள்..!!
சிங்கப்பூர்: ஜூன் 13ஆம் தேதி மாலை நேரத்தில் கல்லாங் பாயா லபார் விரைவுச் சாலையில் (KPE) ஃபெராரி ஸ்போர்ட்ஸ் கார் உட்பட 6 வாகனங்கள் மோதிக்கொண்டதில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகப் பக்கங்களில் பரவி வருகின்றன.
அந்த காணொளிகளில் KPE சுரங்கப்பாதையின் வலதுபுற பாதையில் 4 வாகனங்கள் மோதிக்கொண்டதும், அவற்றின் முன் பகுதிகளுள் சேதம் அடைந்திருப்பதும் அவற்றுக்கு முன்னால் மேலும் 2 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதும் தெரிகிறது.
சம்பவ இடத்தில் குடிமைப் பாதுகாப்பு படையினரும் (SCDF) இருந்துள்ளனர். மேலும் அந்த காணொளியில் காயமடைந்தவர்கள் ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லப்படுவது தெரிகிறது.
கல்லாங் பாயா லெபார் விரைவுச் சாலையில் இருந்து டம்பைன்ஸ் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் பேட்லி சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை (ஜூன் 13) இரவு 10:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SCDF வீரர்கள் விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சிறுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனை செல்வதற்கு மறுத்துவிட்டனர்.
விபத்தில் 6 வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், 47 வயதான பெண் பயணி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.