சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??
சிங்கப்பூர்: மலேசியாவில் செயல்படும் மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, மோசடி பணத்தையும் வங்கி அட்டைகளையும் பெற முயன்ற 3 மலேசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 3 மலேசியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைந்த 6 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 69 வங்கி அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.20 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் $200,000 வரை பெற இந்த வங்கி அட்டைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் பலன்களைப் பிறர் அடைவதற்கு துணை புரிந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 நபர் மீது கணினி அமைப்பிற்கு அங்கீகரிக்கப்படாமல் அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இது போன்ற மோசடி பணத்தை மீட்க பிற மாநிலங்களில் இருந்து ஆட்களை வரவழைக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.