செங்காங் - புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!
செங்காங் – பூங்கோல் இலகுரயில் (LRT) அமைப்பின் விரிவாக்கம் மற்றும் இணைப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது எதிர்கால திறன் மேம்பாட்டிற்கும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டுமானத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் எனவும், திறனை அதிகரித்து பயணிகளுக்கு ஒரு சுமூகமான பயணத்தை இது வழங்குவதே எங்களது இலக்கு எனவும் LTA தெரிவித்துள்ளது .
விரிவாக்கப்பட்ட பணிமனை மற்றும் தண்டவாளங்கள் முழுமையாக செயல்பட தொடங்கியவுடன் இந்த இலக்கு அடையப்படும் என்று ஜூன் 20ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் LTA விட்டுள்ளது.
கட்டுமானத்தின் அடுத்த கட்டத்தில் தண்டவாள உபகரணங்களை நிறுவுதல் மற்றும் ரயில் சோதனை ஆகியவை அடங்கும்.
கட்டுமான ப பணிகளுக்கு வசதியாகச் செங் லிம் நிலையம் வழியாக செல்லும் செங்காங் இலகுரயில் மேற்கு வட்டப் பாதையின் சேவை அக்டோபர் 18ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட உள்ளது.
இந்த இடைநிறுத்தத்தின்போது பயணிகள் ரென்ஜோங் நிலையம் வழியாகச் செல்லும் மேற்கு வட்டப் பாதையில் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களது பயணங்களை தொடரலாம்.
பயணிகளின் திறனை அதிகரிப்பதற்காக தொடர்புடைய வழித்தடங்களில் இணைக்கப்பட்ட இலகுரயில்களையும் LTA இயக்க உள்ளது.
வழக்கமான பேருந்து சேவைகள் மற்றும் வாரநாட்களில் இயக்கப்படும் செங்காங் மேற்கு ஷட்டில் பேருந்து வழித்தடங்கள் A மற்றும் B உள்ளிட்ட மாற்றுப் போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து செயல்படும்.
ஷட்டில் A பேருந்து காலை 6 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஷட்டில் B பேருந்து மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் இயக்கப்படும். இப்பேருந்துகள் ஏறக்குறைய 3 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் என LTA தெரிவித்துள்ளது.