சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்: அப்பர் தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் யோ சூ காங் காலையில் ஒரு பயங்கர சாலை விபத்தை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

ஜூன் 20ஆம் தேதி மாலை சுமார் 6.05 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து குறித்த விசாரணையை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையின் முடிவில், இந்த விபத்தில் 3 கார்கள் மற்றும் 1 டாக்சி சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அதில் பயணித்த 4 பேர் படுகாயம் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

57 வயதான டாக்சி ஓட்டுநர், 55 மற்றும் 64 வயதுடைய 2 டாக்சி பயணிகள் மற்றும் 69 வயதுடைய கார் ஓட்டுநர் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர்(SCDF) தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் டாக்சியின் முன்பக்க வலது பக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதம் காணப்படுகிறது.

படுகாயம் அடைந்த 4 பேரும் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்தில் லேசான காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மறுத்துவிட்டார்.

இந்த விபத்து குறித்த விசாரணையைக் காவல்துறையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK