சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

இந்தியாவைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் அறிவழகன்(33), துரைராஜ் குலோத்துங்கன் (27) இருவரும் சுற்றுலா பயணிகள் ஆவர்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் துரைராஜ் வெவ்வேறு அட்டைகளை பயன்படுத்தி ஒரு பெருந்தொகையை எடுப்பதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார்.

கவனித்ததை அடுத்த அந்த நபர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு துரைராஜ் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த 51 ஏ டி எம் அட்டைகளும் கிட்டத்தட்ட S$75,000 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

நடந்தது என்ன?
60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி இந்த உரிமம் இல்லாத பண பரிமாற்றம் சேவை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியை கொண்டு சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சில பொருட்களை அவர் வாங்கியது தெரியவந்துள்ளது.

பணம் செலுத்தும் முறைகள் சட்டம் (Payment Service Act) மற்றும் முறைகேடான கணினி பயனீட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளியாக இருவரும் கருதப்பட்டுள்ளனர்.

இவருக்கு உடந்தையாக இருந்த அங்கப்பன் அறிவழகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி முறையான உரிமம் இல்லாமல் $10.2 மில்லியன் பணத்தை இந்தியாவிற்கு அனுப்பிய குற்றத்திற்காக இரண்டு இந்தியர்களுக்கு ஜூலை 3, 2026 அன்று சிங்கப்பூர் நீதிமன்றமானது சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

அங்கப்பன் அறிவழகன் என்பவருக்கு 15 மாதங்கள் மற்றும் 3 வாரங்கள் சிறை தண்டனையுடன் $6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர் 2012 முதல் சிங்கப்பூரில் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் தெரியவந்துள்ளது.

துரைராஜ் குலோத்துங்கன் என்பவருக்கு 8 மாதங்கள் மற்றும் 3 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.