ஒரு நாடு தனது நாட்டு மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வெளிநாடுகளை சார்ந்திருக்காமல் தானே உற்பத்தி செய்வதை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையை எட்ட வைக்கும்.
அதாவது ஒரு நாடு எத்தகைய செல்வ வளம் மிக்கதாக இருந்தாலும் அது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு இணையானதாக கருத முடியாது. ஏனெனில் பல பணக்கார நாடுகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்திருக்கின்றன.
மாவுச்சத்து மிகுந்த முக்கிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை ஒரு நாட்டின் உணவு தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான முக்கிய உணவு வகைகளாகும்.
ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய விவசாய உற்பத்தி நாடுகள் கூட இந்த ஏழு முக்கிய உணவு வகைகளில் குறைந்தபட்ச ஒரு உணவுப் பொருளுக்காவது இறக்குமதியைச் சார்ந்திருக்கின்றன.
அதற்கு இடம் கொடுக்காமல் ஏழு முக்கிய உணவு வகைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே நாடு உலகில் ஒன்று மட்டுமே உள்ளது. அதன் பெயர் கயானா.
“நேச்சர் ஃபுட்ஸ்” நடத்திய ஆய்வின்படி 186 நாடுகளில் தென் அமெரிக்கா நாடான கயானா மட்டுமே தனது அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தியை முழுமையாக சார்ந்திருக்க கூடிய நாடாக திகழ்கிறது.
மத்திய அரசிய ஊட்டச்சத்து வகைகள் அனைத்தையும் உற்பத்தி செய்வதிலும் உள்நாட்டு தேவையை தாண்டி மாவுச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதிலும் உணவு உற்பத்தியில் உலக அளவில் தனித்துவமான இடத்தையும் கயானா பிடித்துள்ளது.
காரணம் என்ன? டயானா இந்த நிலையை எட்டியதற்கு காரணம் இயற்கையை எந்த வகையிலும் சேதப்படுத்தாததுதான். மற்ற தென் அமெரிக்கா நாடுகள் விவசாயத்திற்காக நிலத்தை விரிவாக்கம் செய்வதற்காக காடுகளை அழிக்கின்றன. ஆனால் கயானா தான் தனது காடுகளில் 85 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை இன்றும் பாதுகாத்து வருகிறது.
சாதகமான காலநிலை: கயானாவின் கடலோரப் பகுதியின் காலநிலை பயிர் உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது மேலும் பூமத்திய ரேகையில் கயானாவின் புவியியல் அமைவிடம் ஆண்டு முழுவதும் நிலவும் வெப்பம் போதுமான மழைப்பொழிவு, அதிக ஈரப்பதம் உள்ளிட்டவை கயானாவின் உணவு உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன.
மாறுபட்ட அணுகுமுறை: டயானாவின் வெற்றிக்கான முக்கிய சூத்திரம் விவசாயத்தில் மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டது தான். அதாவது அந்நாடு ஊடுபயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரே வயலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒன்றாக பயிரிடுவதன் மூலம் அதிக சாகுபடிக்கும் வருமானத்திற்கும் வழிவகை ஏற்படுகிறது.
உதாரணமாக மக்காச்சோளமும் சோயாபீன்ஸும் ஒரே மண்ணில் அறிகுறியை விளைவிக்கப்படுகின்றன. அப்படி ஊடுபயிர் சாகுபடிக்கு வெவ்வேறு பயிர்களை ஒன்றாக விதைப்பதன் மூலமாக சாதகமற்ற வானிலை பூச்சித்தொல்லை காரணமாக ஒரு பயிர் அழிந்தால் மற்றொரு பயிர் தப்பி பிழைக்க முடியும். வருமான இழப்பு ஏற்படாது என்பது இதன் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.