Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல் (Google Search) குரோம் உலாவி Chrome Browser) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) ஆகியவற்றை முன்கூட்டியே கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை Google வற்புறுத்தியதாக ஐரோப்பிய ஆணையம் கூகுள் மீது குற்றம் சாட்டியுள்ளது.


இதற்காக 2018ம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையம் கூகுள் நிறுவனத்திற்கு 4.34 பில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்தது.

இதனை எதிர்த்து Google நிறுவனம் மேல்முறையீடு செய்த போது, 2022 கீழ் நீதிமன்றம் இந்த அபராதத் தொகையை 4.1 பில்லியன் யூரோக்களாக குறைத்தது.

Google மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் (Alphabet) செய்த போது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்ற முழுமையாக நிராகரித்துள்ளது.

சந்தை போட்டியை  முடக்கியதற்காக விதிக்கப்பட்ட இந்த அபராதம் (4.1 பில்லியன் யூரோ) இறுதியானது எனவும், இதற்கு மேல் Google நிறுவனம் அப்பீல் செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.


நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை இலவசமாகவும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் மாற்றுவதற்கு நாங்கள் செய்த முதலீடுகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

எனினும் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத் தீர்ப்பிற்கு பிறகே தங்களது விதிமுறைகளை மாற்றி அமைத்து விட்டதாகவும் Google தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.