சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் பயணிகளுடன் சென்ற டாக்ஸி..!!.திடீரென சுயநினைவை இழந்த ஓட்டுநர்..!! அடுத்து நடந்தது என்ன..??

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச் சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த 73 வயது டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சுயநினைவு இழந்ததைத் தொடர்ந்து, அவரது வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதியது.

தடுப்பில் மோதியதில் டாக்ஸி ஓட்டுநருக்கு பலத்த காயமடைந்தது. இந்த விபத்து குறித்த ஆளானது காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.


தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது ஓட்டுநர் சுயநினைவின்றி இருந்ததாகவும், பின்னர் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வெளிவந்தது.

ஜூலை 6-ஆம் தேதி மதியம் 12:50 மணியளவில் ஜூவல் சாங்கி விமான நிலையத்திலிருந்து லாவாண்டர் நோக்கிச் சென்ற போது, ஓட்டுநர் திடீரென சுயநினைவு இழந்துள்ளார்.

காரின் பின்னிருக்கையில் 36 வயது தாயும் அவரது 6 வயது குழந்தையும் இருந்துள்ளனர். கார் கட்டுப்பாடின்று சாலையோரத் தடுப்புகளில் உரசுவதை கண்ட அந்தப் பெண் காரின் கதவை திறந்து, அதை தடுப்புச் சுவரில் தேய்த்து உராய்வை ஏற்படுத்தி காரை நிறுத்தி உள்ளார்.

சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 10) உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளனர். அந்த காரில் பயணித்த பயணிகள் இருவருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்பதையும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விரிவான விசாரணை நடத்தி வருகிறது.