பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!!
இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயது சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் என்ற பணிப்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 97 வயதில் சேர்ந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்த முதியவர் நினைவிழப்பு (Dementia) நோயால் பாதிக்கப்பட்டவர்.
2025 ஆம் ஆண்டில் முதியவரின் உடலில் தினமும் புதிய வெட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவதை அவரது பேரன் கவனித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் எழுந்து வீட்டில் நேரடி ஒளிபரப்பு வசதி கொண்ட ஒரு மறைமுக கேமராவை பொருத்தினார்.
அதில் பணிப்பெண் முதியவரை கொடூரமாக துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியது. பணிப்பெண் சக்கர நாற்காலியில் இருந்த முதியவரின் தலை, கண்கள், வயிறு, கை மற்றும் கால்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலமாக அடித்து துன்புறுத்தியது தெரிய வந்தது.
இதனை அடுத்து புகார் கொடுத்த நிலையில் பணிப்பெண்ணை கைது செய்த விசாரித்த போது வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு முதியவரையும் பராமரித்து வந்ததால் ஏற்பட்ட சோர்வு மற்றும் மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தான் நடந்து கொண்டதாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் மிகவும் வயதானவர் பலவீனமானவர் மற்றும் அவரை தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்ததால் இந்தத் தொடர் வன்முறையை கடுமையாக நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும் பணிப்பெண்ணுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.