சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!!

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!!

சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்(IRAS) வருமான வரியைக் குறைப்பதற்காகப் போலியான வணிக ஏற்பாடுகளைச் செய்த அதிக வருவாயீட்டும் 279 பேரைக் கண்டறிந்துள்ளது.

ஜூலை 7- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து IRAS தாக்கல் செய்துள்ளது.

2021 முதல் 2025 வரை விசாரிக்கப்பட்ட 124 சம்பவங்கள் மூலம் IRAS  மொத்தம் $49 மில்லியன் கூடுதல் வரியை மீட்டெடுத்துள்ளது.

இந்த நபர்கள் தங்களின் தனிநபர் வருமானத்தை நேரடியாக பெறாமல், அதற்கென பிரத்தியேகத் தனியார் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் வருவாயைப் பெற்றுள்ளனர்.

ஒரே ஒரு சம்பவத்தை தவிர மற்ற அனைத்து சம்பவத்திலும் நிறுவனத்தின் லாபத்தை வரிவிலக்கு அளிக்கப்பட்ட ஈவுத் தொகையாகவோ (Dividends) அல்லது வட்டியில்லாத பங்குதாரர்களாகவோ ( Shareholder Loans) இவர்கள் எடுத்துக் கொண்டது அம்பலமாகியுள்ளது.

சிங்கப்பூரில் ஆண்டுக்கு $1 மில்லியனுக்கும் மேல் சம்பாதிப்பவர்களுக்கான அதிகபட்ச தனிநபர் வருமானவரி 24% ஆகும். ஆனால் நிறுவனங்களில் லாபத்திற்கான கார்ப்பரேட் வரையானது 17% மட்டுமே.

இந்த 7% வரி வித்தியாசத்தை தவிர்ப்பதற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் வரிச் சலுகைகளைத்  தவறாக பயன்படுத்துவதற்காகவும் இவர்கள் இத்தகைய போலி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வருவாயை மறைப்பது (Tax evasion) மட்டுமே குற்றமாக கருதப்பட்டாலும், வணிக ரீதியான எந்தவொரு உண்மையான நோக்கமும் இன்றி, வரியைக் குறைப்பதற்காக மட்டுமே நிதி முறைகேடு மற்றும் போலி நிறுவன ஏற்பாடுகளை (Tare Avoidance) செய்வதும் கடுமையான குற்றமாகும்.

அண்மையில் 3 மருத்துவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து IRAS இன் நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

2023 ஆம் வரி மதிப்பீட்டு ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, இவ்வாறு போலியான திட்டங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்ய முயல்பவர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய அசல் வரியுடன் சேர்த்து 50% கூடுதல் அபராதம் (Surcharge) விதிக்கப்படும்.

வரி ஆலோசர்கள் அல்லது கணக்காளர்களின் தவறான வழிகாட்டுதலால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், தங்களின் வரி விவரங்களுக்கு தனி நபர்களே முழு பொறுப்பு எனவும், தவறிழைக்கும் வரி முகவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் IRAS எச்சரித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK