RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!!

RTS சேவை தொடங்கிய பிறகு சிங்கப்பூரர்களுக்கு வரும் அபாயம் குறித்து ஆய்வு வெளியீடு..!!

சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோகூர் பாருவையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டம் (RTS) சேவையானது விரைவில் தொடங்க உள்ளது.

இந்த பெருநகர ரயில் பாதையின் திறப்பு மூலமாக சிங்கப்பூர் வணிக கூட்டமைப்பு சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சிங்கப்பூர் உணவு மற்றும் பானங்கள் சங்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு வெளியீடானது தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வு ஜோகூர் பாரு சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு உள்ளூர் சில்லறை மற்றும் உணவு பானங்கள், தொழில்துறையில் நுகர்வோர் செலவினம், சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் வணிக போட்டித் தன்மையாகிய அவற்றில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி ஆராய்ந்து ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது மாஸ்டர் கார்டின் வரலாற்று பரிவர்த்தனை தரவுகள் சிங்கப்பூர் மற்றும் ஜோகூரில் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வுகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் அதிகாரப்பூர்வ அரசாங்க புள்ளி விவரங்கள் தொழில்துறை ஆலோசனைகள் மற்றும் குழு விவாதங்கள் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதற்கான பயணம் மற்றும் நுகர்வு அனுமானங்களை இணைத்த ஒரு மாதிரி கட்டமைப்பு உள்ளிட்ட பல தரவு மூலங்களை இந்த ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த ஆய்வு குறித்த இன்று (ஜூலை 16) ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஜோகூர் பாரு – சிங்கப்பூர் நெடுஞ்சாலை திறப்பு விழாவானது சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சுமார் S$756 மில்லியன் உள்வரும் செலவினத்தை உருவாக்கும் எனவும் அதே நேரத்தில், ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் நுகர்வோரின் வெளிச்செல்லும் செலவினமானது ஆண்டுதோறும் சுமார் S$1.05 பில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனால் நமது நாட்டில் ஆண்டுதோறும் S$290 மில்லியன் மதிப்பிலான நுகர்வு, நிகர வெளியேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது தேசிய சில்லறை மற்றும் உணவுச் சேவை விற்பனையில் ஏறத்தாழ 0.4% ஆகும். அதாவது, 1% க்கும் குறைவான தாக்கமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை சேவையினால் கடுமையான போட்டியையும், சவால்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலை பயணிகளுக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சில்லறை மற்றும் உணவுச் சேவை வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்தாலும் மக்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.