சிங்கப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு... S$900 மில்லியன் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சர்வதேச அளவில் எரிசக்தி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாலும், அதை சமாளிக்க சிங்கப்பூர் அரசு S$900 மில்லியன் மதிப்பிலான கூடுதல் உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஜூலை 29 அன்று அரசு வெளியிட்டது.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதலாக S$300 மதிப்பிலான CDC வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கு முன்பு வழங்கப்பட்ட உதவிகளுடன் சேர்த்து, 2026–2027 காலகட்டத்தில் குடும்பங்கள் அதிக நிதி ஆதரவைப் பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதியான HDB வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு U-Save மின்கட்டண சலுகை கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் மின்சாரக் கட்டண உயர்வின் தாக்கத்தை ஓரளவு குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் இந்த தொகுப்பின் மூலம் பல்வேறு நிதி ஆதரவுகள் வழங்கப்படவுள்ளன. அதிகரித்து வரும் மின்சார மற்றும் செயல்பாட்டு செலவுகளை சமாளிக்க தேவையான உதவிகளை அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த புதிய உதவித் திட்டம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையிலும் குடும்பங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிதி உதவி தகுதியுடைய பயனர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்களின் கணக்குகளில் நேரடியாக சேர்க்கப்படும்.
CDC வவுச்சர்கள் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாத தொடக்கத்தில் குடும்பங்கள் இதனை டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் இந்த $900 மில்லியன் கூடுதல் தொகுப்பானது உலகளாவிய பொருளாதார அந்த நிலை மற்றும் உள்நாட்டு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒரு பெரிய நிம்மதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.