இந்த சம்பவத்தால் டம்பைன்ஸ் இணைப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வழித்தடங்கள் பாதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் அந்த வழித்தடங்களைத் தவிர்க்குமாறும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் ஒரு தனியார் வாடகை கார் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு இரவு 7:40 மணியளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீர்த்தாரைப் பீரங்கிகள் மற்றும் இரண்டு தீயணைப்பு குழாய்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவுச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக, அந்த வழியாக இயக்கப்படும் 13 பொதுப் பேருந்து சேவைகள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகி உள்ளன.