குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கான உலகளாவிய தேவை அதிகரித்திருப்பது, சிங்கப்பூரின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.9% வளர்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த அரசின் மதிப்பீடும் உயர்த்தப்பட்டுள்ளது.
AI சார்ந்த உலகளாவிய முதலீடுகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் பட்சத்தில், சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மேலும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.