சிங்கப்பூர்: மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கான மாஸ்டர் பிளான் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
முன்னாள் காவல் கல்லூரியின் மிகவும் பிரபலமான ஆறு கட்டிடங்கள் உள்ளடக்கி சில கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும்.
அடுத்த மாதம் தொடங்கப்பட உளள BTO பிளாட்டுகளின் வடிவமைப்பில் இணைக்கப்படும்.
மேலும் பாதுகாக்கப்பட்ட ஆறு பழைய போலீஸ் அகாடமி கட்டிடங்களில் நான்கு மறு பயன்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய HDB எஸ்டேட்டுக்கு வெளியே அமைந்துள்ள மீதமுள்ள இரண்டு கட்டிடங்கள் மூத்த போலீஸ் அதிகாரிகள் கிளப்பாக தொடர்ந்து செயல்படும் எனவும் மற்றொன்று எதிர்கால மேம்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகாடமி மைதானத்தின் ஒரு பகுதி சமூக பயன்பாட்டிற்காக பொது இடமாக மாற்றியமைக்கப்படும்.
மவுண்ட் பிளசெண்டில் முதல் ஆர்டர் திட்டத்தில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் கல்லூரியின் நீச்சல் குளத்தின் டைவிங் போர்டை HDB பிளாட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இருக்கைகளாக மாற்றும்.
மவுண்ட பிளசண்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மூடப்பட்ட நடைபாதைகளின் வடிவமைப்பும் பழைய போலி அகாடமி கட்டிடத்தில் உத்வேகத்தை பெற்று, டெரகோட்டா கூரைகள், வெள்ளை தூண்கள், காற்றோட்டம், லூவர்கள், வளைவுகள் போன்ற தனித்துவமான வடிவமைப்பை அடங்கி இருக்கும்.
இந்த திட்டமானது நான்கு வகைகளில் கட்டமைக்கப்படும். இதில் சுமார் 5000 வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் Mount Pleasant Crest என்று அழைக்கப்படும். இதன் கீழ் சுமார் 1600 வீடுகள் கட்டப்படும்.
சுமார் 1300 இரண்டு அறை flexi வீடுகள் முதல் நான்கு அறைகள் உடைய வீடுகள் வரை கட்டப்படும். அவை அடுத்த மாதம் விற்பனைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மவுண்ட் பிளசண்ட் வட்டார சாலை ஒன்றுக்கு “Old Police Academy Road” என்று பெயரிடப்படும்.
இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மவுண்ட் பிளசண்ட் குடியிருப்பு பகுதிக்கான மேம்பாட்டு திட்டங்களை பற்றி அறிய, தோ பாயோ வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் மையத்தில் உள்ள கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.