காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 37 வயது ஆண் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்து, பலமுறை தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு, Telegram வழியாக தொடங்கிய உறவு பின்னர் அந்த ஆண் திருமணம் ஆனவர், முன்னாள் உறவுகள் மற்றும் குழந்தை பற்றிய தகவலை மறைத்தது தெரியவந்ததால் பெண் உறவை முடித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டார்.
முதல் சம்பவம் 2022 ஜூலை 22 அன்று நடந்தது. பெண்ணை பிளாக்கின் கீழே காத்திருந்த ஆண் திடீரென அவளது பையைப் பிடித்து காரில் இழுத்து, டுயாஸ் பகுதியில் உள்ள Raffles Marina-க்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பலத்த தாக்குதலில் ஈடுபட்டு, பெண்ணின் முகம் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்படுத்தினார்.
இரண்டாவது சம்பவம் அதே ஆண்டு நவம்பர் 23 அன்று நடந்தது. பெண் புதிய மொபைல் வாங்கச் சென்றபோது, ஆண் அவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு லிப்ட் பயன்படுத்தும் போது, CCTV-வில் பதிவாகியபடி, அவர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார். இதில் அவள் தரையில் விழுந்து தலையிலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டன.
மூன்றாவது சம்பவம் கிளார்க் குவே பகுதியில் நடந்தது. அங்கு ஆண், பெண்ணின் மொபைலை பறித்ததோடு, நண்பரின் காரில் ஏறியிருந்த அவளை மீண்டும் இழுத்து சாலையில் இழுத்துச் சென்றார். இதனால் அவளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் பல காயங்கள் ஏற்பட்டன.
விசாரணையில், ஆண் தன்னை மதுபானத்தில் “spiked drink” காரணமாக கட்டுப்பாடு இழந்ததாகவும், CCTV காட்சிகள் மாற்றப்பட்டதாகவும் வாதிட்டார். மேலும் மொபைல் தனது நிறுவனத்தின் சொத்து எனக் கூறியும் தப்பிக்க முயன்றார். ஆனால் நீதிபதி Cheng Yuxi, அனைத்து வாதங்களையும் நிராகரித்து, நான்கு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என அறிவித்தார்.
அவருக்கு 15 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் மேல்முறையீடு செய்யும் நிலையில் இருப்பதால் உடனடியாக காவலில் எடுக்கப்படவில்லை.