சிங்கப்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கும் விழா..!!!

சிங்கப்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கும் விழா..!!!

சிங்கப்பூர்: டான் கா கீ அறக்கட்டளையின் இளம் கண்டுபிடிப்பாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் விருது பெறுவதற்காக விண்ணப்பங்கள் 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

உலக பிரச்சனைகளை தீர்க்க படைப்பாற்றல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தும் இளைஞர்களை அங்கீகரித்து ஊக்கம் அளிக்கும் விதமாக அறக்கட்டளையின் சார்பில் இளைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கடந்தாண்டு(2024) வென்ற நான்கு அணிகள், டான் கா கீ அறக்கட்டளை மற்றும் டெமாசக் அறக்கட்டளையின் ஆதரவுடன் இந்த ஆண்டு(2025)சூங் சாங் லிங் குழந்தைகள் கண்டுபிடிப்பு விருது போட்டியில் பங்கேற்பதற்காக சீனாவின் ஹெபேக்கு பயணம் செய்து வெள்ளி பதக்கத்தையும் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்த சர்வதேச போட்டியில் சீனா, ஹாங்காங், மக்காவ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து ஏராளமான பங்கேற்பாளர்கள் கலந்துள்ளனர்.

46,000 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளை ஏற்பாட்டாளர்கள் பெற்று உள்ளனர். போட்டிகள் மிகக் கடுமையாக இருந்தது.

500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் 37 விருதுகள் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு(2024) வெற்றியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு சர்வதேச அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இரண்டு விருதுகளை வென்றனர்.

17 வயது மாணவி லியோஜி படைத்துள்ள பயோ பேக் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நடைமுறையையும் இணைக்கும் ஒரு புதுமையான கண்டுபிடிப்புக்காக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉