கர்ப்ப காலத்தில் Paracetamol பயன்படுத்தலாமா??

கர்ப்ப காலத்தில் Paracetamol பயன்படுத்தலாமா??

உலகம் முழுவதும் பல வருடங்களாகவே வலிக்கும் காய்ச்சலுக்கும் Paracetamol மருந்தை கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் Tylenol என்கிற வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தக்கூடாது என்ற தகவலை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் அதிபர் கூறியதை அனைத்து உலக சுகாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள் Paracetamol மருந்தினை பயன்படுத்துவதில் எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவ குழுக்கள் தெளிவுபடுத்தியது.

சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையமும் இந்த கருத்தை முன்மொழிந்துள்ளது. கர்ப்ப காலத்தின்போது Paracetamol மருந்தை பயன்படுத்துவதற்கும் autism பயணம் தொடர்பு திறன் குறைபாட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் கூறியுள்ளது.

கர்ப்ப காலத்தில் இந்த மருந்து எடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த வித குறைபாடும் ஏற்படாது என்ற உறுதியை ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை.

மருத்துவர் ரீதியாக கர்ப்ப காலத்தில் தேவைப்பட்டால் வலி அல்லது காய்ச்சலை குறைப்பதற்காக Paracetamol மருந்தை பயன்படுத்தலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.