ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை தென் ஆப்பிரிக்காவின் பிரான்ஸ் தூதுவர் என்கோசிநாதி இமானுவேல் ம்தேத்வா என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளார்.
திடீரென அவர் சடலமாக ஹோட்டல் அருகில் கிடந்துள்ளார். சம்பவம் மறைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையின் போது, தூதுவரின் மனைவி திங்கட்கிழமை அன்று மாலை கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் மனைவிக்கு அனுப்பிய செய்திகள் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உள்ளதையும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ் வழக்கறிஞர் லாரி டெகோ இந்த விசாரணை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு தூதுவர் 22 ஆம் மாடியில் உள்ள ஹையட் ரீஜென்சி ஹோட்டலில் உள்ள ஒரு அறையை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததாகவும், அந்த அறையின் ஜன்னல் கத்தரிக்கோலால் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஹோட்டலின் பாதுகாப்பு பணியாளர் ஒருவர் காலை 11 மணி அளவில் வெளிப்புற பக்கத்தில் அவரது உடலைக் கண்டு காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆராய்ந்த போது மருந்து அல்லது மயக்க பொருள் பயன்படுத்தபட்டதற்காக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் சட்ட வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
முதற்கட்ட விசாரணைக்கு பிறகு சம்பவமானது தற்கொலை என கருத்தில் கொண்டு காவல்துறையினர் மேலும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.