சிங்கப்பூரில் பெருமைக்குரிய அறிவிப்பு..!!! என்ன..??

சிங்கப்பூரில் பெருமைக்குரிய அறிவிப்பு..!!! என்ன..??

கெண்டாங் கெர்பாவ் மருத்துவமனை என்ற கே கே மருத்துவமனை அந்த காலத்தில் சிங்கப்பூரில் மகப்பேறு நிபனத்துவத்திற்கு புகழ்பெற்ற ஒரே அரசாங்க மருத்துவமனையாக இருந்தது.

இன்று ஹேம்ப்ஷியர் சாலையில் உள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகமாக இந்த மருத்துவமனை இருந்து வருகிறது.

1924 முதல் 1997 வரை 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறந்தது.

கேகே மருத்துவமனை தொடங்குவதற்கு முன்பு அந்த வளாகத்தில் 1858 முதல் சிங்கப்பூரின் ஐந்தாவது பொது மருத்துவமனை செயல்பட்டு வந்தது.

அங்கு மகப்பேறு சிகிச்சையை பெற வாய்ப்பு இருந்தது. 1880 முதல் 1920 வரை வசதி குறைந்த பெண்களும் அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

1924 இல் இந்த பொது மருத்துவமனையானது கேகே மருத்துவமனை எனும் இலவச மருத்துவமனையாக மாறியது.

இரண்டாம் உலகப்போரின் போது கேகே மருத்துவமனை அவசர பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

பெருமைக்குரிய செய்தி:
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் டாக்டர் பெஞ்சமின் ஹென்றி சியர்ஸ் கேகே மருத்துவமனையின் முதல் உள்ளூர் மகப்பேறு மருத்துவராக 1937 இல் இணைந்தார்.

1966இல் உலகிலேயே அதிக குழந்தைகள் பிறப்பிற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது இந்த கேகே மருத்துவமனை.

மேலும் இதுபோன்ற பல பெருமைக்குரிய நிகழ்வுகள் இந்த கேக்கை மருத்துவமனையில் நிகழ்ந்தது.

கே கே 101 வது ஆண்டு நிறைவில் சிங்கப்பூரின் 76 ஆவது தேசிய நினைவுச்சின்னமாக நேற்று (01/10/2025) இந்த மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK