சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்த மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க புதிய கையேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த கையேடு வேலை இடங்களில் மனநலம், மன அழுத்தம் மற்றும் ஆதரவு முறைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கையேட்டில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்தும் செயலிகள் மற்றும் முறைகள், மன அழுத்தம், விரக்தி, மனநல சிக்கல்கள் போன்றவற்றை அடையாளம் காணும் குறிப்புகள், மேலாளர்கள் மற்றும் மனிதவளம் நிர்வாகிகள் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கும் வழிகள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
இதன் நோக்கம் ஊழியர்களுக்கு மனநலக் கவனத்தை அதிகரித்து, மன அழுத்த மேலாண்மைக்கான வழிகாட்டல்களை வழங்குவதோடு, முன்னெச்சரிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு சேவைகள் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்குவதாகும்.
இந்தக் கையேடு PDF மற்றும் ஆன்லைன் வடிவில் கிடைக்கின்றது. ஊழியர்கள் இதை HR / Employee Assistance Programme (EAP) வழியாக அணுகி பயன்படுத்தலாம்.
நிறுவனங்கள் இதன் அடிப்படையில் மனநலக் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும், தங்கள் பணியாளர்களுக்கான ஆதரவான சூழலை உருவாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.