பயணிகளே..!!! சிங்கப்பூரில் 10 நாட்களுக்கு மூடப்படும் MRT நிலையங்கள்..!!

பயணிகளே..!!! சிங்கப்பூரில் 10 நாட்களுக்கு மூடப்படும் MRT நிலையங்கள்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்ததாவது, கிழக்கு-மேற்கு MRT வழித்தடத்தில் தண்டவாள இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நவம்பர் 29 முதல் டிசம்பர் 8 வரை சில நிலையங்கள் மூடப்படும். இந்த காலத்தில் சிமெய் மற்றும் தானா மேரா நிலையங்கள் மூடப்படும்.மேலும் பெடோக் மற்றும் தெம்பனிஸ் நிலையங்களுக்கும், தானா மேரா மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கும் இடையில் ரயில் சேவை இருக்காது என்று தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக LTA மற்றும் SMRT இணைந்து மாற்று பேருந்து சேவைகளை ஏற்பாடு செய்துள்ளன. பேருந்து எண் 7 பிடோக் மற்றும் தெம்பனிஸ் நிலையங்களுக்கு இடையில் ஒவ்வொரு 3 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். பேருந்து எண் 8 பிடோக் மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையில் சுமார் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இயக்கப்படும்.

கட்டுமானப் பணிகளின் போது சில பகுதிகளில் ரயில் சேவைகள் குறைந்த இடைவெளியுடன் இயங்கும். தெம்பனிஸ் மற்றும் பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும், பயோ லெபார் மற்றும் பிடோக் நிலையங்களுக்கு இடையில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ரயில்கள் இயக்கப்படும். எக்ஸ்போ மற்றும் சாங்கி விமான நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை உச்ச நேரங்களில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு முறை இயங்கும்.

இந்தக் காலத்தில் சுரங்கப்பாதைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நெரிசலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பயண நேரம் அரைமணி நேரம் வரை நீட்டிக்கப்படலாம்.எனவே பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு LTA கேட்டுக்கொண்டுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK