தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..??

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..??

தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

புதன்கிழமை (19.11.25) முதல் மொத்தம் 595 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளங்களின் மழைப்பொழிவை விட அதிகமாகும்.

அதிகாரிகள் இன்று (22.11.25) “சிவப்பு எச்சரிக்கை” விடுத்து, 103 சமூகங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

உள்ளூர்வாசியான அலெக்ஸ் தெரிவித்ததாவது, தாம் மற்றும் நண்பர்கள் ஹாட் யாயிலிருந்து கிராபி நகரம் நோக்கி மிதிவண்டி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.ஆனால் வெள்ளத்தால் தங்கள் ஹோட்டலில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் படம்பிடித்த வீடியோவில், ஹாட் யாய் பகுதியில் தண்ணீர் முழங்கால் அளவு உயர்ந்திருந்தது, வாகனங்கள் தண்ணீரில் டயர்கள் மூழ்கியபடி சென்றன என்று கூறினார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தகவல் தொடர்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. “இப்போது என்ன செய்யலாம் என எங்களுக்கு தெரியவில்லை, மழை நின்றுவிட்டாலும், வெள்ளம் வடியவில்லை” என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

பாங்காக் போஸ்ட் தகவலின்படி, ஹாட் யாய் நகரின் பல பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை மற்றும் நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலா குழுக்களும் ஹாட் யாயில் சிக்கித் தவிக்கின்றன. பத்து பேர் கொண்ட குழு வெள்ளத்தால் ஹோட்டல் அறையில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஹோட்டல் மேலாளர் அவசரநிலையில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK