சிங்கப்பூரில் மின் சிகரெட் விற்பனையில் இளம் பெண் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
20 வயதைச் சேர்ந்த அல்பி சாய் புவோ இன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் whatsapp செயலி மூலமாக மின் சிகரெட் களை விற்பதற்காக விற்பனையை விளம்பரம் செய்துள்ளார்.
பிறகு அல்பியின் கைபேசியை அதிகாரிகள் ஆராய்ச்சி செய்த போது அவர் ஜோகூர் பார்வையில் மின் சிகரெட் களை வாங்குவதற்காக தனது நண்பர்களுக்கு உதவிய செயல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிங்கப்பூருக்குள் மின் சிகரெட் களை கொண்டு வருவதற்கு அல்பி ஏற்பாடு செய்து இருப்பதும் அப்பட்டமாக வெளிவந்துள்ளது.
உடனடியாக கல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் விசாரித்த பொழுது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் மீது நன்னடத்தை கால உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் நீதிமன்றம் ஆனது அல்பியை இரவு 10 மணியிலிருந்து காலை 6:00 மணி வரை வீட்டிற்குள் இருக்க வேண்டும் எனவும் அவர் 50 மணி நேரம் சமூக சேவைகளின் ஈடுபட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.