சிங்கப்பூரில் அமலாக்க நடவடிக்கையின் போது சிக்கிய மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூரில் அமலாக்க நடவடிக்கையின் போது சிக்கிய மூன்று பேர் கைது..!!

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் இன்று(18/12/2025) சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு தகவலை வெளியிட்டது.

சிங்கப்பூரில் 26 வயது முதல் 35 வரையிலான வயதை உடைய ஒரு இந்திய நாட்டவர், ஒரு நேபாள பெண் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என மூன்று பேரும் சமூக வருகை விசாவின் மூலமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.

தற்போது திடீரென்று சோதனையில் ஈடுபட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இந்த மூவரும் சிக்கியுள்ளனர். இவர்களை விசாரித்த போது விசாவின் காலவரையறை முடிவடைந்தும் சட்ட விரோதமாக தங்கி உள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் மூவரையும் அனுமதித்த நான்காம் நபராகிய 29 வயதை சேர்ந்த இந்திய நாட்டவர் என்பது தெரிய வந்தது.

இந்த குற்றத்திற்காக ஜுரோங் வெஸ்டில் டிசம்பர் 16ஆம் தேதி மூவரும் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக நான் தங்கி இருந்தாலோ அல்லது அடைக்கலம் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் டாலர் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK