உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் பயன்படுத்தி 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உடைய பாஸ்போர்ட்டுகள் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நாடுகளுடைய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

நான்காவது இடத்தில் உள்ள பாஸ்போர்ட்டுகளின் நாடுகள்: பிரிட்டன், நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகும். 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி செல்ல முடியும்.

இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 82 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 18 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் முறையாக 10 இடங்களுக்குள் வந்துள்ளது. UAE தற்போது ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் மீண்டும் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. 24 இடங்களுக்கு விசா இல்லாமல் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி செல்லலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK