அதிகாலை முதலே திரண்ட மக்கள் கூட்டம்...!!! ஏன்..?? எதற்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆப்பிள் ஐபோன் 17 இன்று (19.09.25) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. புதிய மாடலை முதலில் வாங்க வேண்டும் என்ற ஆவலுடன், ஏராளமான ஆப்பிள் ரசிகர்கள் கடை திறப்பதற்கு முன்பே வரிசையில் நின்றனர்.
சிலர் அதிகாலை 3 மணி முதலே கடை வாசலில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குள், வரிசையில் இருந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்தது. கடை, கூட்ட நெரிசலை சமாளிக்க, இரண்டு தனி வரிசைகளை அமைத்தது. அதில் ஒன்று ஆன்லைனில் முன்கூட்டியே ஆர்டர் செய்தவர்கள், மற்றொன்று நேரில் வாங்க வந்தவர்கள்.
வரிசையில் முதலிடம் பிடித்தவர், வியட்நாமியர். அவர் அதிகாலை 3 மணிக்கு வந்திருந்தார். மற்றொரு வியட்நாமியர் அதிகாலை 4 மணிக்கு வரிசையில் நின்று, பத்து ஐபோன்கள் வாங்கி வியட்னாமுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். போன்களை வாங்கிய பிறகு அதே நாளில் மதியம் விமானத்தில் நாடு திரும்புவதாகவும் கூறினார்.
ஸ்பாட் வாங்குபவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர். வியட்நாம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர்.
முன்கூட்டிய ஆர்டர் வரிசையில் முதலிடத்தை பிடித்தவர் 47 வயது உள்ளூர் நபர். அவர் காலை 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்தார்.
இன்று காலை 8 மணிக்கு கடை கதவுகள் திறக்கப்பட்டபோது, முதலில் முன்கூட்டியே ஆர்டர் செய்தவர்களுக்கு மட்டுமே புதிய ஐபோன்களை வழங்கினர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு, நேரில் வாங்குபவர்களும் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.