சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!!

சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (19/09/2025) ஆண் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். மேலும் குழந்தையின் தலைமுடியையும் பிடித்து எழுத்து குழந்தையை எட்டி உதைத்துள்ளார்.

ஒரு வாளி தண்ணீரில் குழந்தையின் தலையை 6 வினாடிகள் வரை மூச்சு திணறும் அளவிற்கு தலையை பிடித்து அமுக்கி வைத்துள்ளார்.

பின்னர் அந்த குழந்தையை தூக்கி மெத்தையில் சுமார் 2 மீட்டர் தூரம் வரை தூக்கி எரிந்துள்ளார். அலமாரியை திறந்து அந்த குழந்தையை உள்ளே வைத்து சில மணித்துளிகள் பூட்டியுள்ளார்.

குழந்தையின் வயிற்றில் உதைத்து, அந்த குழந்தையை காலை வைத்து அழுத்தி, முதுகில் குத்தியுள்ளார்.

இறுதியாக அலமாரியின் ஆடைகள் தொங்கவிடப்படும் கம்பியில் குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்.

இதே போன்ற ஒரு சம்பவம் சென்ற ஆண்டு(2024) ஆகஸ்ட் மாதம் ஒன்பது முதல் 11 மாதங்கள் வரை இருந்த ஒரு குழந்தையை பொது இடத்தில் பார்வையாளர்கள் மத்தியில் பயங்கரமாக கொடுமைப்படுத்திய காரணத்தினால் சென்ற ஆண்டு(2024) செப்டம்பரில் இந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தையைப் பற்றிய விவரமும் மற்றும் துன்புறுத்திய நபரின் விவரமும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தப்பட்ட குழந்தைக்கும் துன்புறுத்திய நபருக்கும் உறவு முறை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.

இந்த வயதானது குடும்ப வன்முறை வழக்காக போடப்பட்டு குற்றவாளி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே 30 வழக்குகள் குழந்தையை துன்புறுத்திய காரணத்திற்காக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த வழக்கு குறித்தும் குழந்தையின் நிலை என்னவென்றும் விவரம் தெரிவிக்கப்படவில்லை.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan