சிங்கப்பூரில் நடந்த அருவருப்பான சம்பவம்..!!! குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை..!!!
சிங்கப்பூர்: 2023 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி சிங்கப்பூரில் 31 வயதான ஒரு பெண், Technology Specialist Recruiter ஆக ஒரு தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தொழில் ரீதியாக இந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் 46 வயது சேர்ந்த Ankit Sharma ஆவார்.
இருவரும் வேலை சம்பந்தமாக பேசுவதற்காக சந்தித்துள்ளனர். வேலை சம்பந்தமாக பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் அவர் தவறான வார்த்தைகளை பேசத் தொடங்கியுள்ளார்.
பிறகு அவரிடம் இருந்து பயந்து தப்பித்த அந்த பெண் காவல்துறைக்குச் சென்று புகார் கொடுத்த நிலையில் அவரை கைது செய்து இன்று(22/09/2025) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இவருக்கு தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.