சிங்கப்பூர் வெளியிட்ட அதிரடி தகவல்..!!!

சிங்கப்பூர் வெளியிட்ட அதிரடி தகவல்..!!!

சிங்கப்பூர் காவல்துறை மற்றும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு நாட்டிற்குள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று உள்துறை மூத்த துணை அமைச்சர் பைசல் கூறியுள்ளார்.

இந்த மாதம்(செப்டம்பர்) 10-ஆம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு எட்டாமிடேட் மின் சிகரெட்டுகளை விற்பனை செய்யும் 8 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கும்பலை கைது செய்தது.

சிங்கப்பூரில் வாழும் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் மின் சிகரெட் பயன்படுத்தினால் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மின் சிகரெட்டுகளை பயன்படுத்தும் இளைஞர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். கல்வி அமைச்சின் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் கட்டாயம் ஆன்லைன் படைப்புகள் மூலம் மின் சிகரெட் உடல் நலத்தை பாதிக்கும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என ஃபீஷால் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுவரை சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் எல்லை சோதனை சாவடிகளில் மின் சிகரெட் களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செப்டம்பர் 14ஆம் தேதியுடன் மின் சிகரெட் மற்றும் தொடர்புடைய பொருட்களின் பெரிய அளவிலான கடத்தல் தொடர்பான 76 வழக்குகளை தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும் அஞ்சல் மூலம் வந்த கடத்தப்பட்ட மின் சிகரெட் தொடர்பான 57 வழக்குகளையும் தடுத்து நிறுத்தி உள்ளது.

 

WHATSAPP CHANNEL LINK👉