சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!

தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) பெருமளவிலான வனவிலங்கு கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்தசம்பவத்தில்,
தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு சரக்கு கப்பல் சிங்கப்பூர் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.விசாரணையின் ஒரு பகுதியாக அந்த சரக்கு கப்பல் தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 17 காண்டாமிருகக் கொம்புகள் (55.4 கிலோகிராம்), மண்டை ஓடுகள், நகங்கள் உட்பட 26.2 கிலோகிராம் எடை கொண்ட சிங்கம் மற்றும் புலி எலும்புகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நைஜீரிய ஆண்கள் தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல், பல நாடுகளை இணைக்கும் ஒரு பெரிய சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் பணமோசடி குற்றங்கள் உள்ளதா என்பதை சிங்கப்பூர் காவல் படையின் வணிக விவகாரத் துறை விசாரித்து வருகிறது.

மேலும், இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை தடுக்க சிங்கப்பூர் தனது சர்வதேச ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தேசிய பூங்கா வாரியம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK