சலூன் கடைக்குள் திடீரென நுழைந்த கும்பலால் பரபரப்பு..!!

சலூன் கடைக்குள் திடீரென நுழைந்த கும்பலால் பரபரப்பு..!!

மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு சலூன் கடையில் நடந்த வண்ணப்பூச்சுத் தாக்குதல் அங்கிருந்த வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர்,  (11.10.2025) தனது நண்பருடன் சலூன் கடைக்கு சென்றபோது, முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கடைக்குள் நுழைந்து, சிவப்பு வண்ணப்பூச்சை அங்கிருந்தவர்களுக்கு தெளித்து விட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டனர்.

அந்த நேரத்தில் சலூனுக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் பத்து பேர் இருந்ததாக கூறப்படுகிறது. கடையில் இருந்த நபர்கள் இந்த சம்பவத்தால் அலறிக் கொண்டிருந்தனர்.அது முழுமையான குழப்பமான காட்சியாக இருந்ததாக அந்த சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வண்ணப்பூச்சு அவர் மீதும் அவர் நண்பரின் மீதும் தெளிக்கப்பட்டு இருந்தது. பின்னர், சலூன் ஊழியர்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்று, புதிய ஆடைகள் வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு சுத்தம் செய்ய உதவினர்.

இந்தச் சம்பவம் குறித்து சலூன் ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.