ICA வெளியிட்ட பதிவு..!!

ICA வெளியிட்ட பதிவு..!!

சிங்கப்பூர் – மலேசியா அருகே உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஏப்ரல் 18) காலை 8:16 மணிக்கு முகநூலில் பதிவிட்டுள்ளது.

பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்பாக சாலை நிலவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று ICA வலியுறுத்தியுள்ளது.

எனவே மலேசியாவில் இருந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக உட்லண்ட்ஸ் சாதனை சாவடியில் இருந்து வெளியேறும் போக்குவரத்து வாகனங்கள் மிகவும் மெர்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சற்று தாமதமாகும் எனவே பயணிகள் பயணம் செய்வதற்கு முன்பாக போக்குவரத்து நிலவரங்களை சரிபார்த்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 18) காலை 9 மணி நிலவரப்படி, CheckPoint.Sg இன் நிகழ் நேர போக்குவரத்து பதிவுகளின் படி உட்லன்ஸில் இருந்து ஜோகூர்பாரு வரையிலான போக்குவரத்து பயண நேரமானது, 55 முதல் 80 நிமிடங்கள் ஆகும் எனவும், துவாஸ் சோதனை சாவடியை கடப்பதற்கு 30 முதல் 45 நிமிடங்கள் ஆகும் என்று தெரிகிறது.

ஜோகூர் ஆருவிலிருந்து உட்லண்ட்ஸ் வருவதற்கு ஆகும் பயண நேரம் ஆனது 30 முதல் 50 நிமிடங்கள் ஆகும். அதே வேலையில் துவாஸ் சோதனை சாவடியை கடப்பதற்கு 20 முதல் 35 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு பிறகு அதிகாரிகள் சரியாக 9:19 மணியளவில் போக்குவரத்து நெரிசல் தற்போது சாதாரண நிலைக்கு வந்துவிட்டதாக மீண்டும் பதிவிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK