வானத்தை அலங்கரித்த சூரிய ஒளிவட்டம்…!! சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படங்கள்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (25.08.25) நண்பகலில் வானில் அரிய “சூரிய ஒளிவட்டம்” தோன்றி பொதுமக்களை கவர்ந்தது.
“CloudSpotting & SkySpotting Singapore” பேஸ்புக் குழுவில் ஜூரோங் வெஸ்ட் பகுதி மக்கள், மதியம் 12:15 மணியளவில் தெளிவான ஒளிவட்டத்தைப் படம்பிடித்து பகிர்ந்தனர்.
இந்த அரிய காட்சிகள் தெலோக் பிளாங்கா கிரசென்ட் மற்றும் அப்பர் புக்கிட் திமா பகுதிகளில் மதியம் 12:45 மணியளவில் தெளிவாக தெரிந்தது.
வானவில் நிறங்களால் சூழப்பட்ட சூரியன் ஒரு கண்கவர் காட்சியாக இருந்தது. தீவு முழுவதும் பலரும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினர்.
வானியல் ரீதியாக, “சூரிய ஒளிவட்டம்” அல்லது “வட்ட வானவில்” எனப்படும் இந்த நிகழ்வு, சூரிய ஒளி பனிக்கட்டித் துகள்களில் பிரதிபலித்து உருவாகிறது. ஏழு வண்ணங்கள் கொண்ட ஒளிவட்டம் தோன்றுவது, வானவிலின் உருவாக்கக் கொள்கையை ஒத்ததாகும்.