சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் நடந்த விசித்திர சம்பவம்..!! 67 வயது முதியவர் அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் சைனாடவுன் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்தப் பகுதியில் காகங்களால் தாக்கப்பட்ட ஒருவர் உறைந்து போயிருக்கிறார்.

அது என்னவென்று தெரியவில்லை என்று காகங்களால் பலமுறை தாக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார்.

சைனா டவுனில் வழுக்கை தலையுடன் இருப்பவர்களை காகங்கள் குறிவைக்கின்றன என்று சில காலங்களாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு காகங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 67 வயதுடைய சாங் யெங் யிவ்வும் ஒருவர்.

அந்த நபர் அப்பகுதியில் நடந்து சென்ற போது 3 முறையாவது அந்த காகங்கள் தன்னை கொத்தி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தலைக்கு மேலே அவை பறந்து சென்றன. என்னவென்றே தெரியவில்லை, காகங்கள் என்னை கொத்துகின்றன. என்னால் எப்போதும் காகங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

62 வயதான டாங் மே யுயட், சாங் தாக்கப்பட்டதை நேரில் கண்டதால் பறவைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏப்ரல்19ஆம் தேதியிலிருந்து தான் இந்த காகங்களின் தாக்குதல்களை தான் கவனித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பகுதி முழுவதும் காகங்கள் பறந்து செல்வதாகவும் குறிப்பாக தலைமுடி இல்லாதவர்களைக் காகங்கள் தாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காகங்கள் பற்றிய ஒரு தகவலின் படி, மே முதல் ஜூன் வரையிலான குஞ்சுகள் பறக்க கற்றுக் கொள்ளும் பருவத்தில் அவற்றை பாதுகாக்க பெற்றோர் முயற்சி செய்கிறார்கள் அப்போது மனிதர்களைக் காகங்கள் இவ்வாறு தாக்கக்கூடும்.

இந்நிலையில் சுற்றுப்புறத்தில் உள்ள காகங்களின் கூடுகளை அகற்றுவது அல்லது காகங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் 1800 – 476- 1600 என்ற எண்ணில் விலங்குகள் மற்றும் கால்நடை மருத்துவ சேவையுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK