வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!!

வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரிகளின் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள மோசடியை தடுக்கும் முயற்சியை, நேற்று முன்தினமான மார்ச் 17ஆம் தேதி அன்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது.

இந்த நடைமுறையின் காரணமாக வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் மோசடி செய்ததாக  56 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண் போலியான பொருட்களை உருவாக்கி, அவற்றின் மதிப்புகளை அதிகரித்து அவற்றிற்கு போலியான சேவை வரிகளின கட்டண பட்டியல்களை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான விலையுடைய 179 பிராண்ட் கடிகாரங்களும் அந்தப் பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பான ஆதாரங்கள், கணக்குப் பதிவுகள் மற்றும் மின்னணு இயந்திரங்கள் ஆகியவற்றையும் உள்நாட்டு வருவாய் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

இந்த சோதனையில் 1300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  தணிக்கை செய்யப்பட்டு விசாரணை செய்ததில், 100 மில்லியனுக்கும் அதிகமான விதி மீறல்கள் கண்டறியப்பட்டன.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் வெவ்வேறு துறைகளில் உள்ள பொருள், தொழில்கள், சேவை மற்றும் வரி தொடர்பான மோசடி சம்பவங்களைக் கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சோதனை குறித்து உள்நாட்டு வருவாய்துறை(IRD) கூறியதாவது:
👉🏻சந்தேகத்திற்குரிய சரக்கு மற்றும் சேவை வரிகளில் நடந்த மோசடி வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக உள்நாட்டு வருவாய்த்துறை இன்று (மார்ச் 19) செய்தி வெளியிட்டுள்ளது.

👉🏻ஜிஎஸ்டியில் மோசடி செய்வது மிகப்பெரிய குற்றம் எனவும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் ஏமாற்றிய வரித்தொகையில் மூன்று மடங்கு அபராதமும், அதனுடன் மேலும் $10,000 அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது.
👉🏻வரி முறைகேடுகள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும், தகவல்கள் தெரிவிப்பவர்களுக்கு மீட்கப்பட்ட வரித்தொகையிலிருந்து 15% வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK