சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!!

சிங்கப்பூரில் வைரலான வீடியோ பதிவு..!! நகைச்சுவை பதிவு என இணையவாசிகள் கருத்து..!!

சிங்கப்பூரில் கருப்பு நிற ஹூடி மற்றும் கருப்பு நிற கால் சட்டை அணிந்த ஒரு நபரின் வீடியோ பதிவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவை டிக் டாக் பயனர் kp0ds பதிவேற்றிய ஒரு டேஷ்கேம் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவில் கடந்த மார்ச் 16ஆம் தேதி டாக் யுவன் பகுதியில் உள்ள பிளாக் 279 இல் இருந்து நிதானம் இல்லாமல் தள்ளாடிய நிலையில் வெளியே வரும் காட்சி பதிவு இடம்பெற்று இருந்தது. அவர் கிட்டத்தட்ட கீழே விழும் அளவிற்கு தள்ளாடி நடந்தபடி சென்றார்.

இதை பார்த்த ஒரு கார் ஓட்டுநர் அந்த நபரை ஜூரோங் கிழக்கு வட்டாரத்தில் கண்ட நபரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். பிறகு அவரை அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வேளையில் அந்த நபர் காரில் இருந்து இறங்கி தப்பிக்க நினைத்துள்ளார்.

ஆனால் கார் ஓட்டுநர் அவரை பிடித்து தப்பிக்க விடாமல் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் தள்ளாடிய நபரை பார்த்தபடி அந்த வீடியோ பதிவானது நிறைவடைந்துவிட்டது.

இந்த வீடியோ இணையதளத்தில் வெகுவிரைவாக வைரலானவை தொடர்ந்து இணையவாசிகள் பலரும் கார் ஓட்டுனரின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். அதில் சிலர் “நன்றாக செய்தீர்கள் நீங்கள் அவரது உயிரை காப்பாற்றியுள்ளீர்கள்” எனவும் பதிவிட்டு இருக்கின்றனர்.

சில இணையவாசிகள் “லவ் சா சா” என்ற பின்னணி இசை மற்றும் காணொளியில் நகைச்சுவைக்க மேலும் மெருகூட்டுவது போல் ஒரு சரியான நிறைவாக அமைந்துள்ளது இந்த வீடியோ பதிவு என கேலியாக கூறியுள்ளனர்.

இது குறித்த சுகாதார அறிவியல் ஆணையம் ஆனது தெரிவித்த செய்தி:
மின்னணு சிகரெட்டை பயன்படுத்திய 34 வயதை சேர்ந்த நபர் சம்பந்தப்பட்ட வழக்கை மார்ச் 16ஆம் தேதி காவல்துறை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.

அதிகாரிகள் அந்த நபரிடமிருந்து இரண்டு மின் சிகரெட்களையும் ஒரு மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த பொருட்கள் சோதனைகள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK