உதாரணமாக பிரிமியர் ப்ரோவில் வீடியோ கிளிப்புகளை ஒழுங்குபடுத்துதல், பெயர் மாற்றுதல், முதல் கட்ட வீடியோ எடிட்டை உருவாக்குதல் போன்றவற்றை ஏஐ மேற்கொள்ளும்.
போட்டோ ஷாப்பில் பின்னணியை மாற்றுதல், பல்வேறு தளங்களுக்கு ஏற்ற வகையில் படங்களை மறு அளவிடுதல் போன்ற பணிகளையும் சில வார்த்தைகளில் கூறினாலே செய்து முடிக்கும்.
மேலும் அடோபின் பயர்பிளை ஏ ஐ தளமும் (Fire Fly) மேம்படுத்தப்பட்டுள்ளது. பிராண்ட் லோகோ உருவாக்குதல், ஸ்டோரி போர்டிலிருந்து வீடியோ உருவாக்குதல், தயாரிப்பு புகைப்படங்களை குறும்படமாக மாற்றுதல் போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஏ ஐ மனிதர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களின் வேலை நேரத்தை குறைத்து படைப்பாற்றலை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என அடோப் தெரிவித்துள்ளது.