சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!!
சிங்கப்பூரில் மெய்நிகர்த் தொலைத் தொடர்பு நிறுவனங்களான சர்க்கிள்ஸ். லைப் (Circles.Life) மற்றும் கிகா! (giga!) ஆகியவை தங்களது கைபேசி திட்டங்களுடன் பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை இணைத்து மலிவு விலையில் வழங்க தொடங்கியுள்ளன.
இதன் மூலம் சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய கட்டணப் போர் (Price War) உருவாகியுள்ளது.
இந்த திட்டங்களில் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: 1.சர்க்கிள்ஸ். லைப் (Circles.Life) திட்டம்: 👉இதில் மாத கட்டணமாக $8 என்ற மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
👉500GB உள்ளூர் தரவு மமற்றும் வரம்பற்ற அழைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.
👉 ChatGPT, Google Gemini உள்ளிட்ட 6 முக்கிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தும் வசதியையும் இது வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு Al தொழில்நுட்பத்திற்கும் தனித்தனியாக சந்தா செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு மாதிரிகளை ஒரே கைபேசிச் செயலில் (Mobile App) வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
அன்றாட வேலைகளில் AI பயன்பாடு அதிகரித்து வருவதால், இத்தகைய மலிவு விலைக்கூட்டு திட்டங்கள் சிங்கப்பூர் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
போட்டித் தன்மைமிக்க தொலைத்தொடர்புச் சந்தையில், தங்களின் தேவைகளைத் தனித்துவப்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு விலைக்குத் தகுந்த பயனை அளிக்கவும் இந்த திட்டமானது உதவுவதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.