உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா?

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: ஆசியாவில் இருந்து தேர்வான ஒரே நாடு எது தெரியுமா?

குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ் (Global Citizen Solutions) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சக்தி வாய்ந்த கடப்பிதழ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு(Henley Passport Index) போன்ற பிரீமியம் பட்டியல்களில் விசா இல்லாத பயணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட குறியீடு வெறும் பயணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய அளவிலேயே உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் தேர்வான ஒரே நாடு சிங்கப்பூர் ஆகும். ஏனென்றால் சிங்கப்பூர் பயண வயசதி மற்றும் முதலீடு ஆகிய பிரிவுகளில் உலகின் முதல் இடத்தில் இருந்தாலும், வாழ்க்கைத் தர பிரிவில் 115 ஆவது இடத்தை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த பட்டியலில் சிங்கப்பூர் பத்தாவது இடத்திற்கு வந்துள்ளது.

மேலும் இந்த பட்டியலில் சிங்கப்பூரை தவிற மீதமுள்ள முதல் 9 இடங்களையும் ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஸ்வீடன் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கடைப்பிதழாக முதலிடத்தை பிடித்த பெருமையை சேர்த்துள்ளது. ஸ்விட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பெற்றிருக்கின்றன.

நான்காவது இடத்தில் ஜெர்மனியும், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் நெதர்லாந்து டென்மார்க் ஆகியவையும், ஏழாவது இடத்தில் அயர்லாந்தும் எட்டாவது இடத்தில் ஐக்கிய ராஜ்யம் ஒன்பதாவது இடத்தில் நார்வே இறுதியாக பத்தாவது இடத்தில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளது.