இந்த விபத்தானது நேற்று (ஜூலை 6) காலை 9.05 மணியளவில் புக்கிட் தீமா விரைவுச் சாலையின் வெளிவழி 10B (Exit 10B) அருகே உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் பாதையில் ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக 3 தடங்களைக் கொண்ட அந்த விரைவுச் சாலையில் 2 தடங்கள் மூடப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடும் என குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தனது Facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
விபத்தில் காயம் அடைந்த 29 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கூ டெக புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர்(SCDF) தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு காரும், ஒரு மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரை ஓட்டி வந்த 56 வயதுடைய நபர் விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.