மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..??

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..??

உயிரினங்கள் பல்வேறு சூழல்களை தகவமைத்துக் கொண்டு வாழும் வகையில் உடலமைப்பை பெற்றுள்ளன வட பசிபிக் பெருங்கடலில் ‘பேரல் ஐ’ என்ற வகை மீன்கள் வாழ்கின்றன. கடலில் சுமார் 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த மீன்களுக்கு சூரிய ஒளி கிடைப்பது அரிது.

இந்த ஆழத்தில் கடல் நீரின் அழுத்தம் மற்றும் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த மீன்கள் தன் தலைப்பகுதியை பரிணாம வளர்ச்சியில் மாற்றம் செய்து கொள்கின்றன.

இந்த மீனின் தலையின் மேற்பகுதி முழுமையாக வெளிப்படையான தோல் மற்றும் அதற்கு கீழே தெளிவான திரவம் நிரம்பிய ஒரு குவிமாடம் உள்ளது. இதனை தெளிவாக காண முடியும் இந்த அமைப்பு மிகவும் நிகழ்வான ஒரு அதிர்ச்சி தாங்கும் வகையில் இருப்பதால் அந்த மீனின் மூளையையும் கண்களையும் பாதுகாக்கிறது.

இதன் கண்கள் மேல்நோக்கி பார்க்கும் வகையில் காணப்படுகிறது இது போன்ற அமைப்பு மற்றும் மீன்களுக்கு இல்லை.

பொதுவாக ஆழ்கடலில் சூரிய ஒளி மிகக் குறைவு. எனவே மேலிருந்து வரும் மிகச்சிறிய ஒளியை கூட கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மீனின் கண்கள் மிகப்பெரிய லென்சு அமைப்புடன் அதிக ஒளி உணரும் விழித்திரையை கொண்டுள்ளது.

கடலின் 700 மீட்டர் ஆழத்தில் அதிகமான அழுத்த நிலையில் கூட கண்ணாடி போன்ற மெல்லிய தலையுடன் வாழும் இந்த மீன் இனமானது விலங்கு உலகில் வெளிப்படையான தலை கொண்ட மிகவும் அரிய முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.