சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சிங்கப்பூர் உணவு அங்காடியில் நடந்த வாக்குவாதம்..!! முன்னாள் நடிகர் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!!

சிங்கப்பூர்: சர்க்கிட் ரோடு உணவு அங்காடி நிலையத்தில் உள்ள கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்னாள் நடிகரும் தற்போதைய உணவு அங்காடி கடைக்காரருமான ஹுவாங் யிலியாங் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.

நேற்று மாலை (மே 10) இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த ஹுவாங் சிகிசைக்காக அவசர மருத்துவ வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் நடைபாதை வியாபாரிகள் மையத்தில் உள்ள ஒரு வெளிப்புறமேசையில் வோங் அவர்கள் அமர்ந்து கொண்டு பார்வையாளர்கள் கூட்டத்தின் மத்தியில் பல காவல்துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. மேலும் அவர்கள் அவருக்கு முதலுதவி அளிப்பதும் அந்த காணொளியில் காணலாம்.

நேற்று மாலை (மே 11) 6 மணி அளவில் தனது கடையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக வாங் தெரிவித்துள்ளார்.


தமது கடைக்கு அருகில் இருக்கும் கடை உரிமையாளர் ஒருவர் தமது உதவியாளரை கடைக்கு வெளியே இருக்கும் மேசைக் கு வருமாறு அழைத்ததாகவும், அந்த கடை உரிமையாளரிடம் தமது உதவியாளருக்கு பேச விருப்பம் இல்லை என்பதை அறிந்த வாங் உதவியாளரைக் கடைக்கு திரும்பி வருமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கடை உரிமையாளர், வாங் கடைக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் கலைந்து போக செய்யும் நோக்கில் சத்தமிட தொடங்கியுள்ளனர். அதற்கு வாங் தனது வாடிக்கையாளர்கள் இதற்கெல்லாம் பயந்து ஓட மாட்டார்கள் என பதிலளித்து உள்ளார்.

அவர் கடையை விட்டு வெளியே வரும்போது யாரோ ஒருவர் பின்னால் இருந்து அவரது வலது காதில் தாக்கியுள்ளனர். அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். அவரை அவ்வாறு தாக்கியது பக்கத்து கடை உரிமையாளரின் கணவர் தான் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த தாக்குதலில் வாங்க்கு எந்த ஒரு ரத்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், காது மற்றும் தாடை பகுதியில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனைக்கு சென்றதாகவும், வாங்கிற்கு 3 நாள் மருத்துவ விடுப்பும், வலி நிவாரணமும் மருத்துவர்கள் வழங்கியதாகவும் வாங் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை செய்த காவல்துறையினர், 64 வயதுடைய நபர் ஒருவரை 60 வயது நபர் தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் அந்த 60 வயது நபர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK