சிங்கப்பூரில் கலை கட்டும் பொங்கல் விற்பனை..!! எதிர்பார்ப்புடன் கடைக்காரர்கள்..!!

சிங்கப்பூரில் கலை கட்டும் பொங்கல் விற்பனை..!! எதிர்பார்ப்புடன் கடைக்காரர்கள்..!!

சிங்கப்பூர் மட்டுமில்லாமல் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடுவர்.

இந்த பொங்கல் விழாவில் கரும்பு வாழையிலை இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து மாலைகள் பூ போன்றவை அனைத்தும் இல்லாத பொங்கல் பண்டிகையை நம்மால் கொண்டாடவும் இயலாது.

தைப்பொங்கல் திருநாளிற்கு அழகு சேர்க்கும் விதமாக பொங்கல் அனைத்தும் சிங்கப்பூரில் உள்ள தேகா வில் இருக்கும் கடைகளில் விற்பனையானது தொடங்கிவிட்டன.

தேக்காவில் இருக்கும் அனைத்து திசைகளிலும் பொங்கல் பானைகளும் இனிப்பான கரும்புகளும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இருக்கிறது.

ஆனாலும் பொங்கலுக்கான வியாபாரம் சற்று மந்தமாக உள்ளது என்று கடைக்காரர்கள் சிலர் இந்த ஆண்டு தெரிவித்துள்ளனர்.
கரும்பு, வாழை இலையும் பெரும்பாலும் இந்தியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்னரே வரவழைக்கப்பட்டன.

இந்த ஆண்டு பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விலையானது சற்று அதிகரித்து உள்ளன. பல நாடுகளில் மழை வெள்ளம் மோசமாக இருப்பதால் சற்று விளைச்சலை பாதித்துள்ளது என வியாபார மேலாளர் திரு பாஸ்கரன் கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை வார நாட்களில் வந்தாலும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக பொங்கல் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK